UAE Tamil Web

பெருநாள் அன்றும் வேலைக்கு வந்த பணியாளர்கள் – நேரில் சென்று பரிசுகளை வழங்கிய அரசு அதிகாரிகள் – வைரலாகும் வீடியோ..!

abudhabi

அபுதாபி: ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு அபுதாபியே விழாக்கோலம் பூண்டுள்ளது. பலரும் தங்களது விடுமுறை நாட்களை பல்வேறு வகையில் கொண்டாடிவரும் வேளையில் முதல்நிலைப் பணியாளர்கள் அன்றும் தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

இதனைப் பாராட்டி அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இந்த ஊழியர்களை நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் ஈத் பரிசையும் வழங்கி மகிழ்வித்தனர்.

இதுகுறித்து அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” ஈத் அல் அத்ஹா அன்றும் சமூகத்திற்கு சேவை செய்யும் பணியாளர்களின் தியாகத்தையும் பொது பாதுகாப்பிற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் பாராட்டும் வகையில் அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

abudhabi
0 Shares
Share via
Copy link