UAE Tamil Web

அபுதாபி ஒரே நாளில் அடுத்தடுத்த விபத்துகள்: என்ன நடந்தது?

Breaking News

அபுதாபியில் இன்று காலை இரண்டு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல் முசாஃபாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற மூன்று டேங்கர்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

ADNOC சேமிப்பு தொட்டிகளுக்கு அருகில் உள்ள ICAD 3-ல் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று டேங்கர்களும்  வெடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியில் இன்று காலை மற்றொரு தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில்,சிறிய ட்ரோன்கள் மூலம் இந்த விபத்து நிகழ்த்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இரண்டு அடுத்தடுத்த விபத்துக்களால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை.

Breaking News
3 Shares
Share via
Copy link