UAE Tamil Web

PCR டெஸ்ட்டிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த மையத்திற்கு அபராதம் – எச்சரிக்கை விடுத்த அபுதாபி அரசு..!

Stock-PCR-test-for-Covid19-

அபுதாபி சுகாதார ஆணையம் கொரோனா PCR பரிசோதனைக்கான கட்டணத்தை 65 திர்ஹம்ஸாக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த பரிசோதனை மையத்திற்கு சுகாதார ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

அரசின் 2021 ஆம் ஆண்டின் 35 வது சுற்றறிக்கையின் படி, மாதிரிகளை சேகரித்தல் மற்றும் பரிசோதனைக்கு 65 திர்ஹம்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையம் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக நினைவுபடுத்தியுள்ளது.

“கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அனைவரும் அறிந்து அதற்கேற்றார்போல் பின்பற்றவேண்டும். கூடுதலாகவோ அல்லது கட்டணத்தில் தள்ளுபடி அளித்தலோ கூடாது” என சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டணத்தை யார் ஏற்பது?

அறிகுறிகள் இல்லாமல் டெஸ்ட் எடுக்க விருப்பப்படுபவர்கள் அவர்களே அதற்கான கட்டணத்தை ஏற்கவேண்டும். அரசு நிதி உதவியுடன் இயங்கும் திட்டங்கள் மூலமாக கொரோனா அறிகுறிகள் இருந்து டெஸ்ட் எடுப்பவர்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படும் எனவும் சுகாதார ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.

சேஹாவின் எச்சரிக்கை

அபுதாபி சுகாதார சேவை வழங்கு நிறுவனமான சேஹா, கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என தெரிவித்திருந்தது. கொரோனா PCR பரிசோதனைக்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக சமூக ஊடங்கங்களில் வெளிவந்த செய்திகளை மறுத்து சேஹா இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap