UAE Tamil Web

அபுதாபி டேங்கர் விபத்து தொடர்பாக இந்திய தூதரகம் ட்வீட்!

அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், பெட்ரோலிய டேங்கர் வெடிப்பில் பலியான இரண்டு இந்தியர்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு அமீரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) அருகே முசாஃபா ICAD 3 பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உயிரிழந்ததை காவல்துறை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் “கூடுதல் விவரங்களைப் பெற சம்பந்தப்பட்ட அமீரக அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் நெருங்கிய தொடர்பில்  உள்ளது” என தூதரகம் ட்விட் செய்துள்ளது.

download

“இறந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிய நாங்கள் அமீரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்று தூதரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

4 Shares
Share via
Copy link