UAE Tamil Web

விசிட் விசாவில் அபுதாபி வருபவர்களா நீங்கள்..? உங்களுடைய தடுப்பூசி சான்றிதழைப் பதிவு செய்வது எப்படி?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்டு 20 ஆம் தேதிமுதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அபுதாபி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. குடியிருப்பாளர்கள், குடிமக்களுக்கு இது ஓகே. அவர்களிடத்தில் Alhosn அப்ளிகேஷன் இருக்கும். அதன்மூலம் கிரீன் ஸ்டேட்டசை காட்டி பொது இடங்களுக்குச் செல்லலாம்.

விசிட் விசாவில் அமீரகம் வருவோர், எப்படி இதற்கு விண்ணப்பிப்பது? அதாவது உங்களுடைய தடுப்பூசி சான்றிதழைப் பதிவு செய்து, பொது இடங்களுக்குச் செல்ல விலக்குப் பெறுவது எப்படி? இதோ இப்படித்தான். பின்வரும் படிநிலைகளை கவனமாகப் படிக்கவும்.

அபுதாபி புறப்படுவதற்கு முன்னர்

  1. ICA வின் இணையதளத்தில் உள்ள Register Arrivals (வருகைக்கான பதிவு) என்பதில் சென்று பதிவு செய்யவும்.
  2. வருகைக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  3. சர்வதேச தடுப்பூசி சான்றிதழை உள்ளிடவும்.
  4. Alhosn அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் உங்களுக்கு SMS வாயிலாக அனுப்பப்படும்.

அபுதாபி வருகையின்போது,

  1. விசிட்டிங் விசாவில் வரும் பயணிகள் விமான நிலையத்திலோ, ICA அப்ளிகேஷனிலோ அல்லது இணையதளத்திலோ தங்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள எண்ணைப் (UID) பெறலாம்.
  2. ICA அப்ளிகேஷனில் பதிவு செய்த அல்லது PCR பரிசோதனை எடுக்கும்போது கொடுத்த மொபைல் எண், UID கொண்டு Alhosn அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
  3. Alhosn அப்ளிகேஷனில் பதிவு செய்யும் பணி நிறைவடைய உங்களுக்கு ஓடிபி ஒன்று அனுப்பப்படும்.
  4. அவ்வளவு தான், உங்களுடைய தடுப்பூசி குறித்த விவரங்கள், PCR பரிசோதனை முடிவுகள் என உங்களுடைய ஜாதகமே அப்ளிகேஷனில் தெரியத் துவங்கும்.
16 Shares
Share via
Copy link