UAE Tamil Web

பல நாட்கள் கழித்து அபுதாபியில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் : மக்கள் மகிழ்ச்சி..!

ShoppingMall

ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் அபுதாபியின் பொது இடங்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதைக் கீழே காண்போம்.

  • திரையரங்கங்களில் தற்போது 40 சதவீத மக்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 30 சதவீதமாக இருந்தது நினைவிருக்கலாம்.
  • ஷாப்பிங் மால்களில் மொத்த திறனில் 40 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கலாச்சார மையங்கள், அருங்காட்சியங்கள், பொழுதுபோக்கு மையங்கள், ஆகியவற்றில் 80 சதவீத மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் 80 சதவீதம் வரையில் விருந்தினர்களை அனுமதிக்கலாம். ஒரு டேபிளுக்கு பத்து பேர் வரையில் அமரலாம். உணவு உட்கொள்ளாத நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும்.
  • சமூக மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் திருமண வைபவங்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் மக்களின் அளவு 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கலந்து கொள்ளும் நபர்கள் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட நெகட்டிவ் பரிசோதனை முடிவை கையில் வைத்திருக்க வேண்டும்.
  • தற்போது 50 சதவீத மக்களுடன் இயங்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் 75% மக்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல ஐந்து பேர்கொண்ட டாக்ஸியில் மூன்று பயணிகளும் (டிரைவர் தவிர்த்து) ஏழு பேர் கொண்ட டாக்ஸியில் 4 பயணிகளும் (டிரைவர் தவிர்த்து) பயணம் செய்யலாம்.
  • சுகாதார கிளப்புகள், விளையாட்டு அகாடமிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் ஸ்பாக்களின் செயல்பாட்டுத் திறன் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தனியார் நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கிரீன்பாஸ் முறையை அமல்படுத்த இக்குழு வலியுறுத்தியுள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கிரீன்பாஸ் முறையானது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShoppingMall
2 Shares
Share via
Copy link