UAE Tamil Web

அபுதாபியில் துவங்கவுள்ள மிகப்பெரிய மீன்பிடித் திருவிழா – 20 லட்சம் திர்ஹம்ஸ் பரிசு அறிவிப்பு..!

fishing

அபுதாபியின் அல் தஃப்ரா கிராண்ட் கிங்ஃபிஷ் சாம்பியன் (Al Dhafra Grand Kingfish Championship) எனப்படும் மிகப்பெரிய மீன்பிடித் திருவிழா அமீரக தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு கிங்ஃபிஷ் சாம்பியன் போட்டியில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பங்கேற்கலாம் எனவும் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கும் இப்போட்டி ஏப்ரல் 2, 2022 ஆம் தேதிவரையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி ஆட்சியாளரின் அல் தஃப்ரா பிராந்தியத்திற்கான பொறுப்பாளர் ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய உத்தரவின்பேரில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 60 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அல் தஃப்ராவின் அல் மிர்ஃபா சிட்டி (Al Mirfa city) யில் நடைபெறும் இத்திருவிழாவில் மூன்று வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

வ.எண் போட்டியின் பெயர் தேதி பரிசுத்தொகை
1 தி தல்மா சேம்பியன்ஷிப் டிசம்பர் 2 – 5 460,000 திர்ஹம்ஸ்
2 அல் முகிரா சேம்பியன்ஷிப் ஜனவரி 6 – 9 680,000 திர்ஹம்ஸ்
3 அல் தஃப்ரா கிராண்ட் சேம்பியன்ஷிப் மார்ச் 25 – ஏப்ரல் 2 920,000 திர்ஹம்ஸ்

ஒவ்வொரு சேம்பியன்ஷிப் போட்டியிலும் தலா 10 ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கு பரிசு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் தஃப்ரா சுற்றியுள்ள தீவுகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும் பாரம்பரிய மீன்பிடித்தலை ஊக்குவிக்கவும் மக்களிடையே மீன் பிடித்தலை பொழுதுபோக்கு விஷயமாக முன்வைக்கவும் இத்திருவிழா உதவும் என்கின்றனர் அதிகாரிகள்.

ட்ரோலிங்க் மற்றும் அனைத்து வகையான வலைகளையும் கொண்டு மீன் பிடிக்கலாம் எனவும் ஸ்பியர் துப்பாக்கிகளை (spear-guns) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் kingfish.aldhafrafestival.com என்ற இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap