UAE Tamil Web

2,794 தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய 40 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை உடனே வழங்கிட நிறுவனங்களுக்கு லேபர் கோர்ட் உத்தரவு..!

want-1640417402304_17df07f1dd3_large

அபுதாபியின் நான்கு நிறுவனங்கள் தங்களது 2,794 தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய 40 மில்லியன் மதிப்புள்ள இறுதித் தொகை உள்ளிட்ட பணத்தினை வழங்காமல் இருந்திருக்கின்றன. பணத்தினை முழுமையாக தொழிலாளர்களுக்கு அளிக்கும் வரையில் தொழிலாளர்களை தங்கும் இடங்களை விட்டு வெளியேறச் சொல்லக்கூடாது, வேறு நிறுவனங்களில் நேர்காணலை சந்திக்க அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு அபுதாபி அரசின் மொபைல் கோர்ட்டில் தீர்த்துவைக்கப்பட்டது. நான்கு நிறுவனங்களும் 2,794 தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய 40 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி நீதித்துறை மற்றும் அமீரகத்தின் துணைப் பிரதமரும் அபுதாபி நீதித்துறையின் ஜனாதிபதி விவாகரத்துத்துறையின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஆலோசனைப்படி தொழிலாளர் நிதி நிலுவை வழக்குகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

want-1640417402304_17df07f1dd3_large
9 Shares
Share via
Copy link