அபுதாபி நீதித்துறையான (ADJD) அதன் இணையதளம் மூலம் பாதுகாப்பான வைப்புத்தொகை மற்றும் நீதித்துறை அபராதம் செலுத்துவதற்கான டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் சேவை வழக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைகள் விரைவாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்யும். மேலும் இது சம்பந்தமான பணியாளர் மற்றும் நீதிமன்றப் பயனர்களின் நேரத்தையும் முயற்சிகளையும் கனிசமாக குறைக்கும்.
அபுதாபி நீதித்துறையின் துணைச் செயலாளர் யூசப் சயீத் அல் அப்ரி, அனைத்து நிலைகளிலும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நீதித்துறையின் டிஜிட்டல் மாற்றத்தை கொண்டுவரவும் முயற்சிகளின் கட்டமைப்பிற்குள் இந்த சேவையின் வளர்ச்சியை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தெரிவித்தார்.
காவல்துறை அறிக்கைகள் மற்றும் ADJD அமைப்புகளில் பதிவு செய்யப்படாத வழக்குகள் அல்லது கோப்புகளுக்கான வைப்புத்தொகையையும் இந்த சேவை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
ADJD நீதிமன்ற பயனர்களின் வசதிக்காக அபுதாபி காவல் நிலையங்களுக்கு பல மடிக் கணிணிகளை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சேவையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீதித்துறைக்கு அபராதம் செலுத்துவதற்கான டிஜிட்டல் சேவையைப் பெற, ஒரு வழக்கு எண் அல்லது அமலாக்கக் கோப்பு எண், நீதிமன்றப் பயனரின் பெயரின் கீழ் அமீரக பாஸ் மற்றும் பணம் செலுத்துவதற்கான கிரெடிட் கார்டு ஆகியவற்றை வைத்திருப்பது கட்டாயமாகும்.
மேலும் பொது வழக்குத்துறையில் வழக்குப் பதிவு செய்யப்படாதவர்கள் அபராதம் செலுத்த நீதிமன்றப் பயனாளியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலீஸ் அறிக்கையின் எண்ணிக்கை தேவை.