UAE Tamil Web

சைக்கிள் ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி – அபுதாபி முக்கிய நெடுஞ்சாலைகளில் இனி வலம் வரலாம்!

சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டவர்களுக்காக வேண்டி அபுதாபி ஸ்போர்ட்ஸ் கவுன்சில், அபுதாபி சைக்கிளிங் க்ளப் உள்ளிட்டவைகளின் முயற்சியால் அபுதாபி காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வேகமாக சைக்கிளிங் செல்ல விரும்புவோர் இனி அபுதாபியின் முக்கிய சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அபுதாபி காவல்துறையின் இணையதளத்தில் போதிய விபரங்களை பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும். சைக்கிளிங் செல்லும் நாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாதையில் மட்டும் பயணிக்க வேண்டும்.

மணிக்கு 80 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்திலும் செல்லலாம். ஆனால் சைக்கிளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். டேஞ்சர் லைட் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டு இதர வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலைகளில் சைக்கிளிங் செய்யலாம் என அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் சைக்கிளிங் செல்வோர் அதீத கவனத்துடன் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link