UAE Tamil Web

அபுதாபி: லூலூ குரூப் தலைமையகத்திற்கு அருகே பயங்கர தீ விபத்து – பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை வேண்டுகோள்..!

fire accident

அபுதாபி நகரத்தில் அல் நஹ்யான் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெடிகிளினிக் அல் மமோரா கட்டிடத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக சிவில் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்ததால் தீயானது அணைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் லூலூ குழும தலைமையகத்திற்கு அருகே அமைந்துள்ளது.

தற்போது குளிவிக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அல் மமோரா பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை சிவில் பாதுகாப்புத்துறை ஆணையம் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. குளிர்விக்கும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை ரோந்து, சிவில் பாதுகாப்பு குழுக்கள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கு இடையூறு அளிக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லூலூ குழும தலைமையகத்திற்கு அருகில் உள்ள இந்தக் கட்டிடத்தில் தீ ஜ்வாலைகள் தெரிவதாக சில பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உடனடியாக அந்தப் பகுதி, ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

தீவிபத்து அந்தக் கட்டிடத்தில் ஏற்பட்டதா? அல்லது அதற்கு அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்டு பின்னர் இந்தக் கட்டிடத்திற்கு பரவியதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

fire accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap