அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியில் நீலப் பள்ளம் தோன்றியுள்ளதை அபுதாபி சுற்றுச்சூழல் முகமை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. ஆழமான கடல் பகுதிகளின் அழுத்தம் மற்றும் உள்ளீடற்ற பகுதிகளின் அழுத்தம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்படும் வித்தியாசம் காரணமாக இந்தப் பள்ளங்கள் தோன்றுகின்றன.
இதனால் என்ன பயன்?
இதன் உட்பகுதியிலும், பள்ளத்தின் விளிம்பிலும் பவளப் பாறைகள் உருவாகும். இதனால் மீன்களுக்கு இவை இயற்கை மறைவிடமாக செயல்படும். ஆகவே, இப்பகுதியில் மீன்களின் வளர்ச்சி கணிசமாக உயரும்.
குறிப்பாக இப்பகுதியில் குரூப்பர், ஸ்வீட்லிப்ஸ், எம்பையர் மீன் மற்றும் ஜாக்ஃபிஷ் ஆகியவை அதிகளவில் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் பழங்காலம் முதல் பவளப்பாறை வளர்ச்சி எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய இவை முக்கிய பங்காற்றும் என சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எவ்வளவு பெரிது?
நீலப் பள்ளத்தின் சுற்றளவு ஏறத்தாழ 300 மீட்டர் நீளமும் 200 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்த பரப்பளவு சுமார் 45,000 சதுர மீட்டர். இதன் ஆழத்தில் மணற்பரப்பு 5000 சதுர மீட்டர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 மீட்டர் ஆழமுள்ள இந்த பள்ளம் அல் தஃப்ரா கடல் சூழலுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லவேண்டும்.
.@EADTweets is monitoring the presence of a rare ‘blue hole’ found in the waters of Al Dhafra region. The natural phenomenon reflects the rich biodiversity of #AbuDhabi’s marine ecosystem. pic.twitter.com/hisiTrKlY1
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) October 9, 2021
