UAE Tamil Web

அபுதாபி வாகன ஓட்டிகளே உஷார்.. எச்சரிக்கை விட்ட காவல்துறை..!

அபுதாபி சாலைகளில் மற்ற வாகன ஓட்டுநர்களை  சீண்டினால் 5,400 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 பிளாக் மார்க்குகள் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

விதிமீறல்களே அமீரக போக்குவரத்து விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும், எனவே விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை வகையில் கொண்ட ‘பாதுகாப்புக்கான பயணம்’ என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி காவல்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாகனங்களில் பயணிக்கும்போது மற்ற வாகன ஓட்டுநர்களை சீண்டி, சாலையை மறித்து வழிவிடாமல் பல ஓட்டுநர்கள் செய்து வருகிறதாக போலிஸார் தெரிவித்தனர். இது போன்ற அபாயமான செயல்களில் ​​ஈடுபடும் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாகனம் பறிமுதல் செய்தல் தொடர்பான சட்ட எண் 5, 2020-யின்படி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 பிளாக் மார்க் விதிக்கப்படும். மேலும் வாகனமும் பறிமுதல் செயப்பட்டு, வாகனத்தை பெற உரிமையாளர் 3 மாதங்களுக்குள் 5 ஆயிரம் திர்ஹம்ஸ் பெனால்டி செலுத்த வேண்டும்.

எனவே வாகன ஓட்டிகள் மற்ற ஓட்டுநர்களை சீண்டாமல் ஓட்டுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap