UAE Tamil Web

அபுதாபி வாகன ஓட்டிகளே உஷார்.. 50 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதமும், காவல்துறையின் எச்சரிக்கையும்!

அபுதாபியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இதுவரை 2,850 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டவர்கள் சிக்கி உள்ளனர்.

பெரும்பாலான வாகனங்கள் ஹை-ஸ்பீடில் சென்றதாலும், ரெட் சிக்னல் விழுந்தபோதிலும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாலும் இத்தகைய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது ரெட் சிக்னல் விதிகளை மீறியதால் பெரும்பாலும் மற்ற வாகனங்களுடன் நேருக்குநேர் மோதுவதற்கு வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து அபுதாபி காவல்துறையை அதிகாரி கூறுகையில், “வாகன ஓட்டிகள் ரெட் சிக்னல் வருவதற்குள் சாலையயை கடக்க முயற்சி செய்வதால் மற்ற திசைகளிலிருந்து வரும் வாகனங்களை கவனிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் ரெட் சிக்னலை கடந்து வாகனம் ஓட்டுபவருக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் 12 பிளாக் மாரக் விழும். மேலும் இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பபடும். பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க 50,000 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

ட்ராஃபிக் கேமராக்கள் மற்றும் ரேடார்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், வாகன விதிகளை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பபடும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

3 Shares
Share via
Copy link