உலகின் மிக பாதுகாப்பான நகரமாக அபுதாபி தேர்வு !

Abu Dhabi named safest city in the world 2019

2019 ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த பாதுகாப்புடைய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ள.

அதன் அடிப்படையில் 89.3 புள்ளிகளுடன் 2019 ஆண்டிற்க்கான உலகின் பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை அபுதாபி பெற்றுள்ளதாக, உலகளாவிய Numbeo கூட்டத்தை அடிப்படையாக கொண்ட குழு அறிவித்துள்ளது.

உலகின் முதல் ஐந்து பாதுகாப்பான நகரங்களாக Doha, கனடாவின் Quebec, தைவான் நகரத்தை சேர்ந்த Taipei மற்றும் ஜெர்மனியை சேர்த்த Munich ஆகிய நகரங்களாகும். முதல் பத்து இடங்களில் துபாய் 83.34 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து swiss நகரத்தை சேர்ந்த Zurich மற்றும் Bern நகரங்கள் இடம்பிடித்துள்ளது. துருக்கியில் Honk kong மற்றும் Eskisehir ஆகிய நகரங்கள் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த குழு குற்றம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு 328 நகரத்தை பட்டியலிட்டுள்ளது.

ஓமன் நாட்டை சேர்ந்து மஸ்கட் 28 ஆவது இடத்தையும், பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மனமா 32 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் சவுதி அரேபியா நாட்டின் ரியாத் மற்றும் ஜெடாஹ் ஆகிய நகரங்கள் 64 மற்றும் 103 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் பாதுகாப்பு இல்லாத நகரங்களாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Pretoria மற்றும் Durban ஆகிய நகரங்கள் 81.16 மற்றும் 80.42 புள்ளிகளுடன் அதிக குற்றம் நடக்கும் நகரங்களாக அறிவிக்கப்படுள்ளது.

Loading...