UAE Tamil Web

முக்கியச் செய்தி: அபுதாபியில் வெடித்துச் சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள்..!

fire engine

அபுதாபியின் யாஸ் ஐலேண்டில் இன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததாக அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி யாஸ் ஐலேண்டில் உள்ள மீன் பண்ணையில் இந்த விபத்தானது நேர்ந்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படை வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

யாஸ் ஐலேண்டில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மீன் பண்ணையில் இந்த விபத்து நேர்ந்திருப்பதாகவும் இதில் யாருக்கும் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என அபுதாபி சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

 

fire engine
1 Share
Share via
Copy link