UAE Tamil Web

பயணத்திற்கு முன் 5 நாட்களுக்குள் ICA ஒப்புதல் பெறுவது கட்டாயம் – எதிஹாட் அறிவிப்பு

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமீரகம் திரும்பலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வெளிநாட்டில் இருந்து அபுதாபிக்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் பயண தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னரே ICAவில் பதிவு செய்து பயணத்திற்கான ஒப்புதலை பெற வேண்டும் என எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதிக்கு முன்னர் அபுதாபி வர இருப்பவர்கள் உடனடியாக ICAவில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ICAவில் பயணத்திற்கான ஒப்புதலை பெற ica.gov.ae என்ற இணையதளத்திலோ அல்லது ICA மொபைல் ஆப்பிலோ விண்ணப்பிக்கலாம்.

Red vs green ICA message: What to check before returning to UAE

அபுதாபியில் இறங்கியதும் UID எண் வழங்கப்படும். பாஸ்போர்ட் எண்ணை ica.gov.ae என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்தும் UID எண்ணை பெற்றுக்கொள்ளலாம். அந்த எண்ணை Al Hosn ஆப்பில் ரெஜிஸ்டர் செய்தால் அபுதாபியில் பொது இடங்களில் பயணிக்க எளிதாக அனுமதி பெற்றுக்கொள்ளலாம். ICAவிடம் ஒப்புதல் பெற்று கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அபுதாபிக்கு விமானங்களில் பயணிக்கலாம் என எதிஹாட் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது

4 Shares
Share via
Copy link