UAE Tamil Web

அபுதாபி போக்குவரத்து மையத்தின் புதிய அபராதப் பட்டியல் வெளியீடு

அபுதாபியில் பொது பேருந்தில் பயணிப்போர் இடையூறு ஏற்படுத்தாமல் நாகரீகமான வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு போக்குவரத்து மையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் அபுதாபியின், ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், பொது போக்குவரத்து பயணிகளால் அவ்வபோது செய்யப்படும் விதிமீறல்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விதிமீறல்களுக்கு 100 முதல் 500 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி போக்குவரத்து மையமத்தின் அபராதப் பட்டியல்:
  • சக பயணிகளை அவமரியாதை செய்தால் அல்லது எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • ஓட்டுநரை சத்தம்போட்டாலும், அவரை திசை திருப்ப முயற்சி செய்தாலும் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  • பேருந்து பயணிகள் தங்கள் போக்குவரத்து அட்டைகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்தல 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • பயணிகள் தங்கள் பயணத்தின் போது சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது சுவிங்கம் போன்றவற்றை மெல்லவோ அனுமதி இல்லை. இதனை மீறினால் 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • புகைப் பிடிப்பதற்கும், பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தாமல் பயணிப்பவர்களுக்கும் 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • பேருந்துகளில் கூர்மையான பொருட்கள் அல்லது எரியக்கூடிய பொருட்களுடன் பயணிக்க கூடாது. மீறினால் 100 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • மாற்று திறனாளிகளுக்கான இருக்கைகளை மற்ற பயணிகள் அபகரித்தால் 100 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap