UAE Tamil Web

முக்கியச் செய்தி: சொந்த குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர் – 3 பேர் பலி – அல் அய்னில் பரபரப்பு..!

-arrest-

தனது சொந்த குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஏமிராட்டி இளைஞர் ஒருவரை அபுதாபி காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல் அய்ன் பகுதியில் வசித்துவந்த நபர், தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை துப்பாக்கியால் சுட, அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இளைஞர் பொது வழக்குத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-arrest-
1 Share
Share via
Copy link