UAE Tamil Web

அபுதாபி: என்னாது கூண்டுல இருந்த சிங்கத்தைக் காணோமா..? – வைரலாக பரவிய செய்தி..!

_Lion_resources1

அபுதாபியில் உள்ள பெரிய நகரமான அல் அய்ன் பகுதியில் இருந்து சிங்கம் ஒன்று தப்பித்து விட்டதாக நேற்று சமூகவலைதளங்களில் ஒரு செய்தி தீயெனப் பரவியது.

இதனை முற்றிலுமாக மறுத்த அபுதாபி காவல்துறை வதந்திகளை பரப்புவது குற்றம் எனவும் எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை பரிசோதிப்பது ஒவ்வொரு சமூக குடிமகனின் கடமை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வதந்திகளால் சமூக மக்கள் அச்சத்திற்கு உள்ளாவதுடன் தேவையில்லாத சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் ஆகவே அதிகாரப்பூர்வ செய்தி தளங்களில் இருந்து வெளிவரும் செய்திகளை மட்டுமே நம்பும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தவாரம் வன விலங்குகளை கண்டால், அவற்றைத் துன்புறுத்தவோ, அவற்றைப் புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்காமல் உடனடியாக அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது அருகில் உள்ள காவல்துறையை தொடர்புகொள்ளவும் என காவல்துறை தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

_Lion_resources1
0 Shares
Share via
Copy link