UAE Tamil Web

“அந்த அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை” – பொதுமக்களை எச்சரிக்கும் அமீரக காவல்துறை..!

sheikh tunnel

அபுதாபி: ஷேக் சயீத் சுரங்கப்பாதையில் செல்வதற்கான வேக அளவை அபுதாபி காவல்துறை மாற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவிவருகிறது.

இதனை அறிந்த அபுதாபி காவல்துறை இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை எனவும் சுரங்கப்பாதைக்குள் செல்லும் வாகனங்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படவேண்டும் என்ற விதிமுறை அமலில் இருப்பதாக நினைவூட்டியுள்ளது.

பொதுமக்கள் காவல்துறையின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

sheikh tunnel
0 Shares
Share via
Copy link