UAE Tamil Web

பளபளக்குற ரோட்ல இப்டி குப்பைய போடலாமா மக்கா? 170 பேருக்கு அபராதம் விதித்த அபுதாபி காவல்துறை!

அமீரகத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் தரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகனத்தில் இருந்தவாறு சாலையில் குப்பைகளை வீசியதாக 170 வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு சாலைகளில் மாசு ஏற்படுத்துவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அமீரக போக்குவரத்து சட்டம் பிரிவு 71படி சாலைகளில் குப்பைகளை வீசும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 6 பிளாக் பாயிண்ட் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாசை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அபுதாபி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Shares
Share via
Copy link