அபுதாபியில் தொலைபேசி மூலம் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த நபர்களின் 21 மில்லியன் திர்ஹம்ஸை அபுதாபி காவல்துறையினர் திருப்பி அளித்துள்ளனர்.
காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவின் நிதி மோசடி புகார் மையம் மூலம் இந்த பணம் திரும்பப் அளிக்கப்பட்டதாக என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய புகார் மையம், நிதிக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் துவங்கப்பட்டது.
இது குறித்து, அபுதாபி காவல்துறையின் மோசடி தடுப்பு பிரிவுத் தலைவர் மேஜர் முஹம்மது அல் ரயான், தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய புகார் மையம் மூலம் ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2022 வரை 1,740 நிதி மோசடி புகார் கிடைத்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் மோசடி செய்பவர்களைக் கண்காணிக்க வங்கிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் புகாரளிக்கப்பட்ட நிதி மோசடி வழக்குகளில் 90 சதவிகித வழக்குகளின் பணத்தை மீட்டெடுக்க முடிந்ததாகவும் அல் ரயான் கூறினார்.
அமீரக மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை, தெரியாத நபர்களுக்கு தெய்யப்படுத்த வேண்டாம் என்றும் வங்கி விவரங்கள் மற்றும் ஆன்லைன் பேங்க் பாஸ்வேர்டு, ATM பின்கள், பாதுகாப்பு எண்கள் (CCV), பாஸ்வேர்டு அல்லது எமிரேட்ஸ் ஐடி விவரங்கள் போன்ற ரகசியத் தகவலைப் பகிர வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான செய்திகளையோ அல்லது அழைப்புகளையோ பற்றி புகாரளிக்க: 800 2626 என்ற எண்ணில் அல்லது aman@adpolice.gov.ae என்ற மின்னஞ்சல் அல்லது அபுதாபி காவல்துறையின் ஸ்மார்ட் ஃபோன் செயலி மூலமாக தெரிவிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.