22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அபுதாபி காவல்துறை..!

Abu Dhabi Police

சவூதி அரேபியாவின் 90 வது தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அபுதாபி காவல்துறையின் பொது கட்டளைப் பிரிவிற்குச் சொந்தமான அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகியவற்றைச் சேர்ந்த 90 ரோந்து வாகனங்கள் அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு “டுகெதர் நெவர்” (Together Never) என்ற வாசகத்துடன் சாலைகளில் வலம் வந்தன.

அபுதாபி காவல்துறையின் தலைமைத் தளபதியான ஃபாரிஸ் கலாஃப் அல் மஸ்ரோயி (Faris Khalaf Al Mazrouei) இதுகுறித்துப் பேசுகையில்,” சர்வதேச உறவுகளில் முன்மாதிரியாகத் திகழும் இந்த ஐரு நாடுகளின் புராதன உறவுகளின் ஆழத்தினை பறைசாற்றும் விதமாக இம்முயற்சி எடுக்கப்பட்டது” என்றார்.

“இந்த அருமையான நாளில் சவூதிக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கட்டுமான மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலமாக சவூதி மென்மேலும் வளங்களைப் பெறவும் வாழ்த்துகிறோம்” என மஸ்ரோயி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.



error: Alert: Content is protected !!