UAE Tamil Web

“எந்தவித அவசர சூழ்நிலையாக இருந்தாலும் இந்த எண்ணிற்கு அழையுங்கள் ; உங்களுக்கு உதவி கிடைக்கும்” – அபுதாபி காவல்துறையின் அறிவிப்பு..!

police

அபுதாபி காவல்துறையின் கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்திற்கு ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் மொத்தம் 38,000 போன்கால்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மையத்தின் அவசர அழைப்பு எண்ணான 999 க்கு அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த கால்கள் வந்திருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய செயல்பாட்டுத்துறையின் தலைவர் பிரிகேடியர் நாசிர் அல் மஸ்காரி,” 24 மணிநேரமும் அவசர அழைப்புகளை ஏற்கும் விதத்தில் கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் இயங்கிவருகிறது. எங்களுக்கு வரும் பெரும்பாலான கால்கள் லேசான விபத்து, டிராஃபிக் ஜாம், அவசர தேவை சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும். எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் வழங்குவோம். அவசர அழைப்புகளுக்கு உள்ளூர் அதிகாரிகளை உடனடியாக நேரில் செல்லும்படி தெரிவிப்போம்” என்றார்.

பாதுகாப்பு ஊடகத்துறை மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் காவல்துறை சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,” சமூக உறுப்பினர்கள் எந்த நேரத்தில் எவ்வித அவசர சூழ்நிலையை எதிர்நோக்கினாலும் எவ்வித தயக்கமுமின்றி எங்களது அழைப்பு எண்ணான 999 க்கு அழைக்கவும். உங்களுக்கான உதவி உடனடியாக கிடைக்கும்” என்றார்.

police
3 Shares
Share via
Copy link
Powered by Social Snap