அபுதாபி காவல்துறையின் ஹேப்பினஸ் பேட்ரோல் பிரிவு அதிகாரிகள் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றும் வாகனவோட்டிகளுக்கு எக்ஸ்போ 2020 க்கான பாஸ்போர்ட் மற்றும் பரிசுகளை வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
அபுதாபி காவல்துறையின் இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக வாகனவோட்டிகள் தெரிவித்துள்ளனர். சமூக பாதுகாப்பை மேம்படுத்த ஒவ்வொரு வாகனவோட்டியும் சாலை விதிமுறைகளை கவனமாக பின்பற்றுதல் அவசியம்.
இதனை வலியுறுத்தவே இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram