அபுதாபியில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் Slab எனப்படும் நீளமான கற்களுக்குள் மறைத்து வைத்திருந்த 6,00,000 Captagon என்ற போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வைத்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அபுதாபி காவல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில், ‘Poison Stones’ எனப்படும் இந்த Operationல் நான்கு அரேபியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, நாட்டில் விநியோகிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து கருத்து தெரிவித்த போதைப்பொருள் தடுப்பு இயக்குனரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் தாஹெர் கரீப் அல் தாஹேரி, “கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கற்களுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்தும் ஒரு புதிய வழியை இந்த கும்பல் கையாண்டுள்ளது என்று கூறினார்.
#أخبارنا | سقوط عصابة "أحجار السموم" في قبضة #شرطة_أبوظبي
التفاصيل:https://t.co/CaTfTC3b8f#أخبار_شرطة_أبوظبي pic.twitter.com/uRADPznihp
— شرطة أبوظبي (@ADPoliceHQ) May 26, 2022
“ஆனால் நமது திறமையான சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் இலக்கை அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் அல் தாஹேரி கூறினார். அபுதாபி காவல்துறை வெற்றிகரமாக இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளது.
மேலும் அமீரக தலைவர்கள் போலீஸ் துறைக்கு அளித்துவரும் ஆதரவு காரணமாக இந்த கடத்தல்காரர்கள் மீது வழக்குத் தொடர எங்களுக்கு வசதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறைக்கப்படவேண்டும், ஆகையால் இதுபோன்ற குற்றச்செயல்களை குறித்து உரிய அதிகாரிகளிடம் புகாரளிப்பதன் மூலம் அபுதாபி காவல்துறையுடன் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.