UAE Tamil Web

இந்த கும்பலிடம் இருந்து போன் வந்தா.. உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க – அபுதாபி காவல்துறை எச்சரிக்கை..!

abudhabi police

அமீரகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வந்தாலும் சில கும்பல் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை ஆன்லைன் மூலமாக அமீரகத்தில் விற்பனை செய்துவருகின்றன.

இதுபோன்ற கும்பல் ஒன்றினை அபுதாபி காவல்துறை சமீபத்தில் பிடித்திருக்கிறது. அவர்களிடம் இருந்து 816 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இக்குழுவின் 142 நபர்களையும் அபுதாபி காவல்துறை சுற்றி வளைத்திருக்கிறது. சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக போதைப்பொருள் விற்பனையை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக இந்த கும்பல் பதிவிடும் புகைப்படங்கள், ஆடியோ மெசேஜ், வீடியோ, பதிவுகள் ஆகியவற்றை காவல்துறை கண்காணித்ததாக அபுதாபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் தஹேர் அல் தஹேரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்காணிப்பின் பயனாக போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதுபோன்ற போதைப் பொருள் கும்பலிடமிருந்து உங்களுக்கு அழைப்பு அல்லது மெசேஜ் அல்லது அவர்களது பதிவுகளை பார்த்தால் உடனடியாக அமர் மையத்தினை 8002626 என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அபுதாபி காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

abudhabi police
2 Shares
Share via
Copy link