UAE Tamil Web

இன்று முதல் பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோருக்கு கொரோனா டெஸ்ட் தேவையில்லை..!

abudhabi police

கொரோனா காரணமாக பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோருக்கு PCR மற்றும் DPI டெஸ்ட் அவசியம் என்ற விதிமுறை சுமார் ஓராண்டுகாலமாக அமலில் இருந்துவந்த நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 19) இந்த விதிமுறையை விலக்குவதாக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்றானது 0.2 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் அடிப்படையிலும் பொது இடங்களுக்குச் செல்வதற்கு கிரீன் பாஸ் கட்டாயம் என்ற விதிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

“குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா தொற்றை குறைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் எனவும் ஆணையம் சமூக வலைத்தளங்கள் மூலமாக வலியுறுத்தியுள்ளது.

abudhabi police
5 Shares
Share via
Copy link