அபுதாபியின் அல் சலாம் தெருவில் இயங்கிவந்த அல் மதாத் ரெஃப்ரெஷ்மெண்ட்ஸ் (Al Madad Refreshments) என்னும் உணவகத்தை மூடுவதாக அபுதாபி உணவுப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2008 (2) ஐ மீறியதாக இந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அபுதாபி அரசு. அபுதாபி முழுவதும் உணவகங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்களுக்கு தரமான உணவுகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அபுதாபி உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
أصدرت هيئة أبوظبي للزراعة والسلامة الغذائية قراراً بالإغلاق الإداري بحق منشأة “مرطبات المدد” بشارع السلام بأبوظبي، والتي تحمل الرخصة التجارية رقم CN-1030302https://t.co/1oFh5D1CDN#أبوظبي#adafsa pic.twitter.com/3aB8YUAfZs
— هيئة أبوظبي للزراعة والسلامة الغذائية (@adafsa_gov) October 20, 2021
உணவகங்கள் தரமற்ற, ஆபத்தான வகையில் உணவுகளைப் பரிமாறினால் 800555 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
