UAE Tamil Web

அபுதாபி ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியில் ரமலான் மாத நேரம் அறிவிப்பு

அபுதாபி ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியில் ரமலானில் பார்வையாளர்களுக்கான நேர விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலானில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி, அல் ஃபுஜைராவில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி மற்றும் அல் அய்னில் உள்ள ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதி ஆகியவை வழிபாட்டாளர்களுக்கு 24 மணிநேரம் இயங்க தயார் செய்ப்பட்டுள்ளது.

ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியில் ரமலான் முழுவதும் அபுதாபியில் உள்ள பல்வேறு தொழிலாளர் விடுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 30,000 இப்தார் உணவுகள் விநியோகிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைகளுக்கு இத்ரிஸ் அப்கர் மற்றும் யஹ்யா ஈஷான் இமாம்கள் தலைமை தாங்குவார்கள்.

உலகளவில் மிக முக்கியமான மத மற்றும் கலாச்சார சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் ஷேக் ஜயித் மசூதியில் ரமலான் காலங்களிலும் பார்வையாளர்கள் வரவேற்கப்படுகின்றன.

ரமலான் காலங்களில் ஷேக் ஜயித் மசூதி பாரவையாளர்களுக்கு, சனிக்கிழமை முதல் வியாழன் வரை, மசூதி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும், பின்னர் மீண்டும் இரவு 9.30 முதல் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும், பின்னர் இரவு 9.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாதத்தின் கடைசி 10 நாட்களில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடிக்க இருப்பதால் அப்போது இரவு 11.30 மணிக்கு மசூதி மூடப்படும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap