UAE Tamil Web

“இரவு நேரத்தில் வெளியே வராதிங்க” – மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..!

sterlisation

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி சமூக பாதுகாப்பை உறுதிபடுத்தவும் கொரோனா பரவலைத் தடுக்கவும் அபுதாபியில் மீண்டும் சுத்திகரிப்புப் பணிகள் ஜூலை 19 ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகின்றன.

நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரையில் நடைபெறும் இந்த பணிகளின் போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நேரங்களில் போதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலொழிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் மிகவும் அவசர காரணங்களுக்காக வெளியே செல்வோர் அதற்கான அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும். அனுமதியைப் பெற www.adpolice.gov.ae என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

அபராதம்

சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறும் வேளைகளில் வெளியே சுற்றும் நபர்களுக்கு 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வர மக்கள் பெர்மிட் வைத்திருக்க வேண்டும் எனவும் இவர்கள் டாக்சிக்களை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பேருந்து, டாக்ஸி ஆகியவை இந்த நேரங்களில் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து தங்களது குடியிருப்புகளுக்குச் செல்லும் மக்கள் பெர்மிட் வைத்திருக்க தேவையில்லை. இருப்பினும் தங்களது தனிப்பட்ட கார்களில் பயணிப்பவர்கள் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு 8003333 என்ற எண்ணிற்கு அவ்னாக் மையத்திற்கு அழைக்கலாம்.

sterlisation
1 Share
Share via
Copy link
Powered by Social Snap