அபுதாபி முனிசிபாலிட்டி கட்டிடத்திற்கு இணையாக செல்லும் சாலைக்கு அபுதாபி நகரத்தை வடிவமைத்த டாக்டர். அப்துல் ரஹ்மான் மக்லோஃப் அவர்களின் பெயரைச் சூட்டியிருக்கிறது அபுதாபி அரசு.
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி நிர்வாக கவுன்சிலின் உறுப்பினரும் அபுதாபி நிர்வாகக் குழு அலுவலகத்தின் தலைவருமான ஷேக் காலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் ஆணைக்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் பிறந்த மக்லோஃப், அங்குள்ள கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் (Architecture) பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் ஜெர்மனியில் பயின்ற இவர் கட்டிடக்கலையில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக சவுதியில் உள்ள மெக்கா, மெதினா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் கட்டுமானப் பணிகளில் பணியாற்றிவந்த மக்லோஃப்-ற்கு ஐநா அதிகாரிகளிடம் இருந்து ஒரு தகவல் வருகிறது. அவர் குறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.