UAE Tamil Web

இனி அபுதாபிக்கு வருபவர்களுக்கு குவாரண்டைன் கிடையாது..!

airport

ஜூலை 1 ஆம் தேதிமுதல் வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

DCT அபுதாபியின் சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவுக்கான நிர்வாக இயக்குனர் அலி அல் ஷைபா இதுகுறித்துப் பேசுகையில்,” இது துபாயின் அமைப்பைப்போல இருக்கும். அதிக ஆபத்தான இடங்கள் மற்றும் குறைந்த ஆபத்தான இடங்களைப் பொறுத்து PCR விதிமுறைகள் மாறுபடும். அவர்களுக்கு குவாரண்டைன் இருக்காது” என்றார்.

தற்போதைய நிலவரப்படி, கிரீன் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் இருந்து வருவோர் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அபுதாபி அரசு வலியுறுத்திவருகிறது.

“இனி வெளியிடப்படும் கிரீன் நாடுகள் பட்டியலில் எங்களுடன் சந்தையை பங்கிட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான நாடுகளுக்கு இடமளிக்கப்படும். ஆகவே,  அனைவரும் அபுதாபிக்குப் பயணிக்கலாம் என நம்புகிறோம்” என ஷைபா தெரிவித்தார்.

இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் விதமாக புதிய சந்தைகளை கண்கானித்துவருவதாக ஷைபா தெரிவித்தார்.

ஷைபா: நாங்கள் இந்த மார்கெட்களை வாரந்தோறும் கவனித்துவருகிறோம். எங்கே வாய்ப்புகள் அதிகம், இழப்பினை ஈடுகட்ட எந்த மார்கெட்டை கையாளலாம் என்பது குறித்து சிந்தித்து வருகிறோம்.

“துபாய் உடனான எல்லைப் பகுதியை மேம்படுத்த இருக்கிறோம். இதன்மூலமாக சுற்றுலாவாசிகள் எளிதாக அபுதாபிக்கு வரும்படியான புதிய திட்டங்களை அபுதாபி அரசு பரிசீலித்துவருகிறது. நாங்கள் சுற்றுலாவாசிகளுக்காக பிரத்யேக வழிமுறைகளை வைத்துள்ளோம். இதன்மூலமாக சுற்றுவாசிகள் எளிமையாக எல்லைப்பகுதியைக் கடக்கமுடியும்” என ஷைபா தெரிவித்தார்.