UAE Tamil Web

அபுதாபி: உலகின் மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வெள்ளிக்கிழமை முதல் மக்களுக்கு அனுமதி..!

NAT-Al-Qana-National-Aquarium-

அபுதாபியின் அல் கானா வாட்டர் ஃப்ரண்ட் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் அக்வேரியம் வரும் வெள்ளிக்கிழமை அன்று மக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அக்வேரியமான இதில் 46,000 உயிரினங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.

உலகின் 10 மண்டலங்களைச் சேர்ந்த 300 வகையான உயிரினங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம். இதில் உலகின் மிகப்பெரிய பாம்பும் ஒன்றாகும். 21 அடி நீளமும் 115 கிலோ எடையும் கொண்ட இந்த பாம்பு கடந்த செப்டம்பர் மாதம் அபுதாபி நேஷனல் அக்வேரியத்திற்கு கொண்டுவரப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிறந்த உலகின் மிக நீளமான மலைப்பாம்பான Reticulated python, விஷமற்றது எனினும் தனது இரையைச் சுற்றி, இறுக்கி அதனைக் கொன்று விழுங்கும் வல்லமை கொண்டது. ஒரு சிறிய நபரை விழுங்கக்கூடிய அளவுக்கு இதன் வாய் விரிந்து கொடுக்கும் தன்மையுள்ளதாம்.

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் உள்ள இவ்வகையைச் சேர்ந்த மலைப்பாம்புகள் மனிதர்களை உணவாக கொள்கின்றன எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், பொதுவாக மனிதர்களை இந்த மலைப்பாம்புகள் அரிதாகவே தாக்குகின்றன என்கிறார்கள்.

தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் இவ்வகைப் பாம்பினை பராமரிக்க தி நேஷனல் அக்வேரியத்தில் இந்த பாம்பிற்காக சுமார் 8000 வகையான இயற்கை அமைப்புகளை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சுறாக்கள், ஆமைகள், பல்வேறு வகையான மீன்களையும் உங்களால் இங்கே பார்க்க முடியும். உணவகங்கள், விஷுவல் ரியாலிட்டி செண்டர், சினிமாக்கள், விளையாட்டு அரங்கங்கள் என உங்களது நேரத்தை பயனுள்ளதாகவும் ஜாலியாகவும் கழி(ளி)க்க இங்கே ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகவரி

ரப்தான்,

அல் மக்தா

அபுதாபி.

அமைவிடம்

 

NAT-Al-Qana-National-Aquarium-
14 Shares
Share via
Copy link