UAE Tamil Web

கோவிட்-19: தொடர் விதி மீறல்கள் நிகழும் பள்ளிகளிலிருந்து தங்கள் குழந்தைகளை நிறுத்தி விட்டு கட்டணத்தை பெற்றோர்கள் திரும்ப கேட்கலாம்.. அதிகாரிகள் தகவல்

school

தலைநகர் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பள்ளிகள் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்குவதை வழக்கமான ஆய்வுகள் உறுதி செய்யும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுவதாகக் கண்டறியப்படும் பள்ளிகளுக்கு 10,000 முதல் 250,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை(Adek) கூறியுள்ளது. மேலும் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு விதிகளை தொடர்ந்து மீறும் பள்ளிகள், வளாக கற்றலில் இருந்து தொலைதூரக் கல்வித் திட்டத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.

அத்தகைய பள்ளிகளில் இருந்து தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி விடுவதற்கும், ஏற்கனவே செலுத்தியுள்ள கல்வி கட்டணத்தை திரும்ப கேட்பதற்கும் பெற்றோர்களுக்கு உரிமை உண்டு. எனினும் இது மாதிரியான நிகழ்வுகள் எதுவும் நடந்து விடாது என்று நம்புவதாகவும், அனைவரின் பாதுகாப்பிற்கான விதிமுறைகளை கடைபிடிக்கும் என்று பள்ளிகள் மற்றும் நர்சரி சமூகங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என Adek-ஐ சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அந்த அதிகாரி “எங்கள் சமூகத்தின் பாதுகாப்பை நாங்கள் முதலிடத்தில் வைக்க வேண்டும், பள்ளிகள் மற்றும் நர்சரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளில் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மிக முக்கியமான ஒன்று” என்றார்.

சமூக தொலைதூர நெறிமுறைகளை கடைபிடிப்பது, முன்கூட்டியே கோவிட் பணிக்குழுக்கள், வழக்கமான துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் திட்டங்கள், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வழக்கமான கோவிட் -19 சோதனை உள்ளிட்ட 62 அளவுகோல்களை ஆய்வுகள் கண்காணிக்கின்றன.

school
0 Shares
Share via
Copy link