UAE Tamil Web

இந்த 31 நாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் கிடையாது – புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்டை வெளியிட்டது அபுதாபி..!

abudhabi_airport1_

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் ஜூலை 31, மதியம் 2 மணிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அபுதாபி வந்த 6 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் 6 & 12 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். அபுதாபி வந்த முதல் நாளில் இருந்து நாட்கள் கணக்கிடப்படும்.

ஜூலை 31 ஆம் தேதி நடைமுறைக்குவரும் புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  1. அல்பேனியா
  2. ஆர்மீனியா
  3. ஆஸ்திரேலியா
  4. ஆஸ்திரியா
  5. பஹ்ரைன்
  6. பெல்ஜியம்
  7. புருனே
  8. பல்கேரியா
  9. கனடா
  10. சீனா
  11. செக் குடியரசு
  12. ஜெர்மனி
  13. ஹாங்காங் (SAR)
  14. ஹங்கேரி
  15. இஸ்ரேல்
  16. இத்தாலி
  17. மாலத்தீவு
  18. மொரீஷியஸ்
  19. மால்டோவா
  20. நியூசிலாந்து
  21. போலந்து
  22. ருமேனியா
  23. சவுதி அரேபியா
  24. செர்பியா
  25. சீஷெல்ஸ்
  26. சிங்கப்பூர்
  27. தென் கொரியா
  28. சுவிட்சர்லாந்து
  29. தைவான், சீனாவின் மாகாணம்
  30. உக்ரைன்
  31. அமெரிக்கா
abudhabi_airport1_
14 Shares
Share via
Copy link
Powered by Social Snap