UAE Tamil Web

இந்த 29 நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை – புதுப்பிக்கப்பட்ட “கிரீன் நாடுகளின்” பட்டியலை வெளியிட்டது அபுதாபி..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

மே 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  1. ஆஸ்திரேலியா
  2. அஜர்பைஜான்
  3. பூட்டான்
  4. புருனே
  5. சீனா
  6. கியூபா
  7. ஜெர்மனி
  8. கிரீன்லாந்து
  9. ஹாங்காங் (SAR)
  10. ஐஸ்லாந்து
  11. இஸ்ரேல்
  12. ஜப்பான்
  13. கிர்கிஸ்தான்
  14. மொரீஷியஸ்
  15. மால்டோவா
  16. மொராக்கோ
  17. நியூசிலாந்து
  18. போர்ச்சுகல்
  19. ரஷ்யா
  20. சவூதி அரேபியா
  21. சிங்கப்பூர்
  22. தென் கொரியா
  23. ஸ்பெயின்
  24. சுவிட்சர்லாந்து
  25. தைவான்
  26. தஜிகிஸ்தான்
  27. ஐக்கிய இராச்சியம்
  28. அமெரிக்கா
  29. உஸ்பெகிஸ்தான்

கடைசியாக வெளியிடப்பட்ட கிரீன் லிஸ்ட் பட்டியலுடன் தற்போதைய புதிய பட்டியலை ஒப்பிடுகையில் அசர்பைஜான், ஜெர்மனி, கிர்கிஸ்தான், மால்டோவா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகியவை கூடுதலாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.