UAE Tamil Web

கிரீன் பட்டியலில் இருந்து 6 நாடுகளை விலக்கிய அபுதாபி : இந்த 28 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை..!

Abu-Dhabi-

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் ஆகஸ்டு 18, மதியம் 2 மணிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi வெளியிட்டுள்ளது.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பயணிகள் வருகையின் போது பிசிஆர் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஆறாவது நாளில் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Alhosn அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பயணிகள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. வந்திறங்கிய ஆறு மற்றும் ஒன்பதாவது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வருகையின்போது பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு குவாரண்டைன் இருக்க வேண்டும். வந்திறங்கிய ஒன்பதாவது நாள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகஸ்டு 18 ஆம் தேதி நடைமுறைக்குவரும் புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  1. அல்பேனியா
  2. ஆஸ்திரேலியா
  3. பஹ்ரைன்
  4. பெல்ஜியம்
  5. புருனே
  6. பல்கேரியா
  7. கனடா
  8. சீனா
  9. செக் குடியரசு
  10. ஜெர்மனி
  11. ஹாங்காங் (SAR)
  12. ஹங்கேரி
  13. மால்டா
  14. மொரிஷியஸ்
  15. மால்டோவா
  16. நியூசிலாந்து
  17. போலந்து
  18. அயர்லாந்து குடியரசு
  19. ருமேனியா
  20. சவூதி அரேபியா
  21. செர்பியா
  22. சீஷெல்ஸ்
  23. சிங்கப்பூர்
  24. தென் கொரியா
  25. ஸ்வீடன்
  26. சுவிட்சர்லாந்து
  27. தைவான், சீனாவின் மாகாணம்
  28. உக்ரைன்

ஜூலை 31 ஆம் தேதி நடைமுறைக்குவந்த கிரீன் நாடுகளின் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 6 நாடுகளை பட்டியலில் இருந்து அரசு விலக்கியுள்ளது. அவை, ஆர்மீனியா, ஆஸ்திரியா, இஸ்ரேல், இத்தாலி, மாலத்தீவு மற்றும் அமெரிக்கா ஆகியவையாகும்.

புதிதாக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இணைக்கப்பட்டுள்ள நாடுகள்: மால்டா, அயர்லாது குடியரசு, ஸ்வீடன்.

Abu-Dhabi-
4 Shares
Share via
Copy link