UAE Tamil Web

தடுப்பூசி எடுக்காதவர்களும் அமீரகம் வரலாம் – அபுதாபி அரசு அறிவிப்பு..!

Stock-India-airport-passengers

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி திரும்புவோருக்கான புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்நடைமுறைகள் இன்று முதல் (ஜூலை 5) முதல் அமலுக்கு வருவதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்

கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் பயணிகள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  1. விமான நிலையம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுக்கவேண்டும்.
  2. தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  3. அபுதாபிவந்த ஆறாவது நாளில் மீண்டும் PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

கிரீன் நாடுகள் அல்லாத பிற நாட்டிலிருந்து அபுதாபி வருவோர் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  1. விமான நிலையம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுக்கவேண்டும்.
  2. பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  3. அபுதாபிவந்த ஆறாவது நாளில் மீண்டும் PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அபுதாபி திரும்பும் குடிமக்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் தங்களது அல்ஹோசன் அப்ளிகேஷனில் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி எடுத்ததற்கான சான்றினைக் காட்டவேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்

கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் பயணிகள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  1. விமான நிலையம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுக்கவேண்டும்.
  2. தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  3. அபுதாபிவந்த 6 & 12 ஆம் நாளில் மீண்டும் PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

கிரீன் நாடுகள் அல்லாத பிற நாட்டிலிருந்து அபுதாபி வருவோர் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  1. விமான நிலையம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுக்கவேண்டும்.
  2. பயணிகள் 12 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  3. அபுதாபிவந்த 11 வது நாளில் மீண்டும் PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.
Stock-India-airport-passengers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap