UAE Tamil Web

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் கவனத்திற்கு : புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகள் வெளியீடு…!

Stock-Abu-Dhabi-airport-passengers_

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அபுதாபி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தங்களது வருகையின்போதும் வந்திறங்கிய ஆறாம் நாளும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

பிற நாடுகளில் இருந்து அபுதாபி வரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தங்களது வருகையின்போது PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அபுதாபி வந்திறங்கிய நான்காம் நாளும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்ட அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். அவர்களது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட விபரம் அல்ஹோசன் அப்ளிகேஷனில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அபுதாபி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை. இருப்பினும் அபுதாபி வந்திறங்கிய 6  &  12 ஆம் நாட்களில் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்.

பிறநாடுகளில் இருந்துவருவோர் தங்களது வருகையின்போது PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும். 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். வந்திறங்கிய 8 ஆம் நாள் மீண்டும் ஒரு PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்.

Stock-Abu-Dhabi-airport-passengers_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap