UAE Tamil Web

அபுதாபி விசா: மருத்துவ பரிசோதனைக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்…!

Stock-covid-testing-DPI_

அபுதாபியில் விசா சம்பந்தமான மருத்துவ பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் இனி கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள பொது கிளினிக்குகளில் 72 மணிநேரம் செல்லுபடியாகக்கூடிய நெகட்டிவ் சான்றிதழைப் பெற்று மருத்துவ பரிசோதனையின்போது சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by AHS-SEHA (@ahsclinics)

அபுதாபியில் சேஹாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நோய்த்தடுப்பு மற்றும் பரிசோதனை மையங்களில் இந்த விதிமுறை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவானது Alhosn அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stock-covid-testing-DPI_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap