UAE Tamil Web

ஈத் அல் பித்ர் விடுமுறையில் அபுதாபிக்குள் நுழைபவர்களுக்கான விதிமுறைகள்..!

abudhabi

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அபுதாபிக்கு வருபவர்கள் நெகட்டிவ் கொரோனா சான்றிதழை வைத்திருத்தல், தொடர்ந்து தங்குபவர்கள் மீண்டும் பரிசோதனை செய்துகொள்தல் போன்ற விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்கவேண்டும் என அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை நினைவுபடுத்தியுள்ளது. சுற்றுலாவாசிகள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களுக்கான விதிமுறைகளைக் கீழே காணலாம்.

சுற்றுலாவாசிகளுக்கான விதிமுறைகள்

கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தங்களது வருகையின்போதும் வந்திறங்கிய ஆறாம் நாளும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். வந்திறங்கிய நாள் முதல் நாளாகக் கருதப்படும். அவர்கள் 48 மணிநேரம் செல்லுபடியாகக்கூடிய கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும்.

கிரீன் நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்கள் 48 மணிநேரம் செல்லுபடியாகக்கூடிய கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அபுதாபி வந்திறங்கிய 6  &  12 ஆம் நாட்களில் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும். வந்திறங்கிய நாள் முதல் நாளாகக் கருதப்படும்.

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

பிறநாடுகளில் இருந்துவருவோர் தங்களது வருகையின்போது PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும். 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். வந்திறங்கிய 8 ஆம் நாள் மீண்டும் ஒரு PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும். 48 மணிநேரம் செல்லுபடியாகக்கூடிய கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்டிய பிறகே அவரது குவாரண்டைன் காலம் முடிவடையும்.

பிறநாடுகளில் இருந்து அமீரகம் வந்து நான்கு நாட்கள் தங்கிய பிறகு அபுதாபி வருவோர், கண்டிப்பாக 6 நாட்கள் அபுதாபியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் எப்போது கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கமளிப்பர்.

அமீரக குடியிருப்பாளர்கள்

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்: 7 நாட்கள் செல்லுபடியாகக்கூடிய கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்: 48 மணிநேரம் செல்லுபடியாகக்கூடிய கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அபுதாபிக்குள் வந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap