புதிய சவுதி விமான நிலையத்திலிருந்து முதல் விமானத்தை அபுதாபி விமான நிலையம் வரவேற்றது!

Abu Dhabi International Airport welcomes Saudia flight from the new King Abdulaziz International Airport

சவூதி அரேபியா ஜெட்டாவில் (Jeddah) உள்ள புதிய கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KAIA) முதல் சர்வதேச விமானத்தை அபுதாபி சர்வதேச விமான நிலையம்(AUH) வரவேற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா இடையேயான வலுவான தொடர்பை நிரூபிக்கும் வகையில் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் (சவுதியா) விமானம் சனிக்கிழமை KAIA-விலிருந்து புறப்பட்டது.

புதிய விமான நிலையத்திலிருந்து வந்த விமானம், Airbus A320 விமானத்தை அபுதாபி விமான நிலைய அதிகாரிகள், வழக்கமான பீரங்கி தண்ணீர் பீச்சி வரவேற்றனர்.

புதிய கிங் அப்துல்ஸீஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் வந்து செல்லமுடியும், 800,000 சதுர மீட்டருக்கும் அதிகமான விமான நிலைய ஓய்வறைகள் மற்றும் உலகின் மிகப்பெரிய அதாவது 136 மீட்டர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளது குறிப்பித்தக்கது.

சவூதி ஜெட்டாவிலிருந்து அபுதாபிக்கு சவுதியா தினசரி விமானத்தை இயக்கவுள்ளது.

 

Loading...