UAE Tamil Web

அபுதாபி : புதிய குவாரண்டைன் விதிகளை அறிவித்தது அரசு – விபரம் உள்ளே..!

அபுதாபி பொது சுகாதார மையம், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டியை வழங்குகிறது. கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான தற்போதைய தனிமைப்படுத்துதல் விதிகள் என்ன என்பதை அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC), அதன் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடக சேனல்களில் ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளது.

PCR சோதனை முடிவு பாசிட்டிவ் என இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?  

உங்கள் PCR (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) சோதனை முடிவு பாசிட்டிவ் என இருந்தால், ADPHC இன் படி பின்பற்ற வேண்டியவை:

  1. மறுபரிசோதனைக்கு அருகிலுள்ள சேஹா டிரைவ்-த்ரூ ஸ்கிரீனிங் சென்டருக்குச் செல்லவும். உங்களுக்கு சுமாரான முதல் கடுமையான அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள முதன்மை மதிப்பீட்டு மையத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் PCR சோதனை முடிவு நெகட்டிவ் என இருந்தால், 24 மணிநேரம் காத்திருந்து மறுபரிசோதனை செய்யுங்கள்.உங்கள் இரண்டாவது PCR சோதனையின் முடிவும் நெகட்டிவ் என இருந்தால், ADPHC குடிமக்களை தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொடர அறிவுறுத்துகிறது.
  1. உங்கள் PCR சோதனை முடிவு பாசிட்டிவ் என இருந்தால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வீட்டில் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் உங்களையோ அல்லது நோயுற்றவரையோ தனிமைப்படுத்தவும்.

கடுமையான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சுகாதாரப் பாதுகாப்பு வழங்கவும். எட்டாவது நாளின் முடிவைப் பொருட்படுத்தாமல், தனிமைப்படுத்தப்பட்ட கடைசி மூன்று நாட்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல், 24 மணிநேர இடைவெளியில் இரண்டு நெகட்டிவ் என முடிவுகள் பெறப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கலாம். இல்லையெனில் 10-நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும்.

 கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தவருடன் தொடர்பில் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்? 

  1. எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி PCR சோதனையை நடத்துவதற்கு, நெருங்கிய தொடர்புகள் உதவியுடன், முதன்மை மதிப்பீட்டு மையத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் PCR சோதனை முடிவு நெகட்டிவ் என வந்து, ஏற்கனவே நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 6வது நாள் மீண்டும் சோதனை செய்யும்போது, நெகடிவ் என்ற முடிவைப் பெற வேண்டும்.

நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நெகட்டிவ் முடிவைப் பெற வேண்டும். தனிமைப்படுத்தலை முடிப்பதற்காக 9வது நாள் மீண்டும் சோதனை செய்யும் போது கிடைக்கும் முடிவு முக்கியமானதாக கருதப்படும்.

  1. உங்கள் PCR சோதனை முடிவு பாசிட்டிவ் என இருந்தால், மருத்துவரின் அறுவுறுத்தலின் அடிப்படையில் வீட்டில் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் நோயாளிகளை தனிமைப்படுத்தவும்.

கடுமையான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சுகாதாரப் பாதுகாப்பு வழங்கவும். எட்டாவது நாளின் முடிவைப் பொருட்படுத்தாமல், தனிமைப்படுத்தப்பட்ட கடைசி மூன்று நாட்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு நெகட்டிவ் முடிவுகள் பெறப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்கலாம். இல்லையெனில் 10-நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

10 Shares
Share via
Copy link