UAE Tamil Web

அபுதாபி: கட்டிடத் தொழிலாளி மீது விழுந்த கான்கிரீட் பிளாக் – 30,000 திர்ஹம்ஸ் இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!

abudhabi court

அபுதாபியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளி இப்போது தனது இடது காலில் 25 சதவீத ஊனத்துடன் தவித்து வருகிறார்.

பணியின்போது அவர்மீது கான்கிரீட் பிளாக் விழுந்ததால், அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. இடது காலில் தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரால் முன்னைப்போல நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளி, தனது நிறுவனத்திற்கு எதிராக அபுதாபி முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில் தனக்கு 80 ஆயிரம் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவர்கள் அளித்த அறிக்கையின்படி, அவரால் முன்பைப்போல நடக்க முடியாது எனவும் வேலைகளைப் பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தொழிலாளிக்கு 30,000 இழப்பீடு அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

குறிப்பிட்ட நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், நிறுவனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது தெரியவந்திருக்கிறது. இதற்கு முன்னர் விதிமுறைகளை மீறியதால் அந்நிறுவனத்திற்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதத்தை அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

abudhabi court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap