UAE Tamil Web

அபுதாபி: நீரில் உலா வரும் 7 மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா.! குடியிருப்பாளர்களை எச்சரித்த EAD.. (வீடியோ)

whale

அமீரகத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சுமார் 7 மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா காணப்பட்டதால், குடியிருப்பாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisment -

இது தொடர்பாக அபுதாபியில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனம் (EAD) விடுத்துள்ள எச்சரிக்கையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அல் பஹியா கால்வாயில்(Al Bahia canal), 7 மீட்டர் திமிங்கல சுறா நீரில் காணப்பட்டது. ஒரு பஸ்ஸின் அளவிற்கு வளரக்கூடிய திமிங்கல சுறாக்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. எனினும் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தில்(nternational Union for Conservation of Nature) திமிங்கல சுறா பாதிக்கப்படக்கூடிய உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதனை பாதுகாக்கும் பொருட்டு அந்த ஆண் திமிங்கல சுறாவை கண்டால் அதற்கு உணவளிக்கவோ அல்லது அருகில் செல்வோ கூடாது என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அல் பஹியா கால்வாயில் நீந்தவோ அல்லது டைவ் அடிக்கவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் இளம் திமிங்கல சுறா ஒன்று காணப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து காணப்படும் இரண்டாவது திமிங்கல சுறா இதுவாகும். இது தொடர்பாக பேசியுள்ள EAD அதிகாரி ஒருவர், ‘ அந்த இளம் சுறா ஒரு வாரத்திற்கு முன் கடைசியாக அல் பஹியாவில் காணப்பட்ட பின்னர், அல் ரஹா கால்வாய்க்கு திரும்பியது. ஆறு வாரங்களுக்கு மேலாக நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம். அது சிறிது எடை குறைந்துவிட்டதை நாங்கள் கவனித்தோம்.

 

View this post on Instagram

 

. عاد قرش الحوت الصغير مياه منطقة الراحة بعد أن شوهد آخر مرة الأسبوع الماضي. على مدار الأسابيع الستة التي كنا نراقبه، لاحظنا فقدانه لبعض الوزن، فبادرنا بإكمال نظامه الغذائي من خلال توفير بعض القشريات الصغيرة حتى عودته للبحر و ذالك بالتعاون مع “ذا ناشونال أكواريوم” تفعيلاً لمذكرة التفاهم في مجال إنقاذ وإعادة تأهيل الأنواع البحرية. نراقب حالياً قرش حوت أخر في منطقة الباهية، وهو ذكر كبير يبلغ طوله حوالي 7 أمتار. و نرجوا من الافراد الامتناع عن السباحة أو الغوص أو إطعامهم أو الاقتراب منهم. كم نرجو من مرتادي البحر والوسائل البحرية المركبات تفادي قناة الباهية والقيادة بحذر. كما نود أن نشكر شركائنا في جهاز حماية المنشآت الحيوية والسواحل دائرة البلديات والنقل وبلدية مدينة أبوظبي وشركة الدار العقارية وموانئ أبوظبي وأبوظبي البحرية ونادي أبوظبي الدولي للرياضات البحرية لجهودهم وتعاونهم مع الهيئة #هيئة_البيئة Our juvenile whale shark has returned to Al Raha after last being seen there one week ago. Over the six weeks we have been monitoring him we noticed that he had lost some weight so through our MOU with the National Aquarium on environmental cooperation and wildlife protection we are supplementing his diet with some krill until he returns to sea. We are also monitoring a second whale shark, a large 7m male in Al Bahia. If you are lucky enough to see them please refrain from swimming with them, diving with them, feeding them or approaching them. And a big thank you to our partners supporting with this endangered species protection: Critical Infrastructure and Coastal Protection Authority, Department of Municipalities and Transport, Abu Dhabi Municipality, Abu Dhabi Ports, Abu Dhabi Maritime, Abu Dhabi Marine, Aldar and the National Aquarium Abu Dhabi. #EnvironmentAbuDhabi #environmentagency

A post shared by Environment Agency – Abu Dhabi (@environmentabudhabi) on

எனவே சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த தேசிய மீன்வளத்துடனான நமது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அந்த இளம் சுறா கடலுக்கு திரும்பும் வரை அதற்கு சில வகை உணவுகளை அளித்து வருவதாக கூறினார். அல் பஹியாவில் காணப்படும் இரண்டாவது திமிங்கல சுறாவையும்(7 மீட்டர்) நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றார்.

அல் பஹியா பகுதிக்கு வருகை தரும் மக்கள் திமிங்கல சுறாவை கண்டால், பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், அல் ரஹா கால்வாயில் இரண்டு திமிங்கல சுறாக்கள் காணப்பட்டதாக EAD தெரிவித்துள்ளது.

கடல்சார் பல்லுயிர் குறித்த விஞ்ஞான தரவுகளை நிரூபிப்பதோடு, நீரின் தரத்திற்கு ஒரு முக்கிய குறிகாட்டியாக செயல்படும் கடல் சூழலில், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க கண்காணிப்புக் குழுக்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவை இல்லாமல் வேறு திமிங்கல சுறாக்களை எப்போது கண்டாலும் அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனத்தை 800555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது