UAE Tamil Web

அபுதாபி: தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் – தொழிலதிபர்களுக்கு உத்தரவிட்ட அரசு..!

vaccine trial

அபுதாபியில் உள்ள உரிமம் பெற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிலாளர்களை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்த அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

- Advertisment -

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் மேலாண்மை ஆணையம் மற்றும் அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து நிறுவனங்களுக்கான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னெச்சரிக்கை விதிமுறைகள்

  • நிறுவன வளாகம் சீரான கால இடைவெளியில் சுத்திகரிப்பு செய்யப்படவேண்டும்.
  • பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும்.
  • முகக்கவசம் அணியவேண்டும்.
  • சீரான கால இடைவெளியில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பணியாளர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும்.
  • மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும்.

முன்னதாக, ஜனவரி 10 ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தவிர்த்து, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் ஊழியர்களின் PCR பரிசோதனைக்கான செலவை நிறுவனமே ஏற்க வேண்டும் என அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.