UAE Tamil Web

அபுதாபி: இன்றுமுதல் திறக்கப்படும் திரையரங்கங்கள்: எத்தனை பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்..?

Cinemas

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எமிரேட் முழுவதிலும் உள்ள திரையரங்கங்களை 30 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதியளித்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisment -

வாடிக்கையாளர்கள் மற்றும் திரையரங்க உறுப்பினர்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் வேண்டும். திரையரங்கங்கள் சீரான இடைவெளியில் சுத்திகரிப்பு செய்யவேண்டும் போன்ற விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.