UAE Tamil Web

அபுதாபி: பேருந்தில் இந்த இடங்களில் அமர்ந்தால் 3000 திர்ஹம்ஸ் அபராதம்..!

BUS

அபுதாபி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுப் பேருந்துகளில் இரு பயணிகளுக்கு இடையே ஒரு இருக்கை வீதம் இடைவெளி இருக்கும் வகையில் சிவப்பு நிறத்திலான சீட் கவர் பொருத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

அந்த இருக்கையில் அமர்வோருக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த கவரில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஒவ்வொரு பயணம் முடிந்தபிறகும் பேருந்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதுபோல, பயணிகள் அடிக்கடி தொடும் இடங்களான டிக்கெட் வழங்கும் இயந்திரம், கைப்பிடிகள் போன்றவையும் கவனமாக சுத்திகரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் பணிமனைக்குத் திரும்பியவுடன் பேருந்தானது முழுவதுமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா அச்சுறுத்தலில் இருந்து சமூகத்தைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் இருப்பதை அவர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் ITC குறிப்பிட்டுள்ளது.

அபுதாபி காவல்துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து இதுபோன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாக ITC தெரிவித்திருக்கிறது.